Monday, April 12, 2010

அறிமுகம் -- நல்லவன் கருப்பு

என்னுடைய ஊர்/சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கை முறைகள்,எங்களை எப்போதும் சூழ்ந்து இருக்கும் வறுமை..எப்போதாவது வருண பகவானின் பார்வையில் பட்டு விளையும் விவசாயம்....விவசாயம் பொய்த்து போகையில் உதவி செய்யும் கருவேல மரம்.....
வீணாய்ப்போன அரசியல் வாதிகளின் தவறான கொள்கையால், ஏழை ஏழையாகிக்கொண்டே..... இப்படி பல .....
இந்த சூழ்நிலையிலும் நாங்கள் கொண்டாடும் திருவிழாக்கள்.....
பொறியியல் என்றால் என்ன என்று கூட தெரியாமல், பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, இன்று ஒரு பொறியாளனாக ஆகிவிட்ட என்னுடைய அனுபவம்.....இன்னும் சொல்லிக்கொண்டே......
எதற்கு எழுதவேண்டும் என்பதைவிட ஏன் எழுதாமல் இருக்கக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கியதால் நானும் இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைக்கலாம் என்று.....

7 comments:

றமேஸ்-Ramesh said...

எழுதுங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்ஃஃ
இனிய சித்திரைவருட நல்வாழ்த்துக்கள்
நல்லவன் எப்பொழுதும் கருப்பாக இருக்கணுமா???

நல்லவன் கருப்பு... said...

வருகைக்கு நன்றி ரமேஷ்....
உங்கள்ளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
நன் நல்லவன் + என்னுடைய நிறம் கருப்பு..... -- அத்துதான் பெயர் காரணம்.....

றமேஸ்-Ramesh said...

விளங்கிட்டுங்க ஆனா அதை நான் வெறுக்கிறேன். கருப்பு நிறம் நீங்க எண்டு சொன்னது. உங்களின் தோலின் நிறமா?? உள்ளத்தின் நிறமா??
எங்களை அடயாளப்படுத்துவது நமது சிந்தனையும் செயலும்
வாழ்த்துக்கள் மீண்டும் தொடருங்கள்
முடிந்தால் மின்னஞ்சலிடுங்கள்
msrames@gmail.com

நல்லவன் கருப்பு... said...

மன்னிக்கவும்..."என்னுடைய பெயர் கருப்பு" என்பதற்கு பதிலாக என்னுடைய நிறம் என்று எழுதி விட்டேன்.....
என்னோட பேரு கருப்பசாமி... சுருக்கமா எல்லாரும் "கருப்பு"ன்னு கூப்பிடுவாங்க....
மத்தபடி நான் ரொம்ப நல்லவனோ இல்ல கெட்டவனோ கிடையாது.....I used to say my friends that "Basically I am nallavan" .This is just for fun.....மற்றபடி வேற ஏதும் கிடையாது.....

ரோஸ்விக் said...

வாங்க கருப்பு... உங்களுக்கு இருக்கு நிறைய பொறுப்பு... :-)

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

ரோஸ்விக் said...

கருப்பு உங்க பேரு.... அது என்ன நல்லவன்? இது யாரு சொன்னது?? :-))

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நானும் உங்களை மாதிரி கிராமத்தான் தான்...

மேலும படியுங்கள் நம்ம தலைவரைப பற்றி:

http://tamilkadu.blogspot.com