Monday, April 12, 2010

அறிமுகம் -- நல்லவன் கருப்பு

என்னுடைய ஊர்/சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கை முறைகள்,எங்களை எப்போதும் சூழ்ந்து இருக்கும் வறுமை..எப்போதாவது வருண பகவானின் பார்வையில் பட்டு விளையும் விவசாயம்....விவசாயம் பொய்த்து போகையில் உதவி செய்யும் கருவேல மரம்.....
வீணாய்ப்போன அரசியல் வாதிகளின் தவறான கொள்கையால், ஏழை ஏழையாகிக்கொண்டே..... இப்படி பல .....
இந்த சூழ்நிலையிலும் நாங்கள் கொண்டாடும் திருவிழாக்கள்.....
பொறியியல் என்றால் என்ன என்று கூட தெரியாமல், பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, இன்று ஒரு பொறியாளனாக ஆகிவிட்ட என்னுடைய அனுபவம்.....இன்னும் சொல்லிக்கொண்டே......
எதற்கு எழுதவேண்டும் என்பதைவிட ஏன் எழுதாமல் இருக்கக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கியதால் நானும் இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைக்கலாம் என்று.....